கொள்கை
மஞ்சள் நோட்டீசு
கொடுத்து
குடம் குலுக்கிக்
கேட்ட அம்மன்
கோவில் கும்பலுக்கு
சட்டைப்பையைத்
துழாவியப் பின்
இல்லை என சொன்ன
என்னை
அறுதியிட்டுக்
கூறமுடியாதெனினும்
தோராயமாவாவது
ஒப்புக்கொள்ளலாம்
நாத்திகன் என்று.
Tuesday, December 22, 2009
கள்ளுக்கடை
கம்யூனிசம்
தாழ்ந்த சாதிக்கென
தனிக்கோப்பை
இங்கில்லை
வீணாய்ப் போன
வருணம் இங்கில்லை
பிச்சைக்காரனுக்குப்
பரிதாபம் இங்கில்லை
தாசில்தாரானாலும்
தனி மரியாதை
என்றில்லை
வாங்கியப் பின்
கழுத்தை திருகி
ஊற்றியப் பின்
உயரம் பார்த்து
சமத்துவம் காத்து
குடித்தப் பின்
குப்புற விழுந்து
முன்பின் தெரியா
முகம் பார்த்து
சிரித்து அழுது
தொடங்குகிறதுப் பேச்சு
ஓட்டு போட்டது முதல்
ஓசோன் ஓட்டை வரை
ஒன்று மட்டும்
புரிகிறது
நீரின்றி அமையாது
உலகு.
கம்யூனிசம்
தாழ்ந்த சாதிக்கென
தனிக்கோப்பை
இங்கில்லை
வீணாய்ப் போன
வருணம் இங்கில்லை
பிச்சைக்காரனுக்குப்
பரிதாபம் இங்கில்லை
தாசில்தாரானாலும்
தனி மரியாதை
என்றில்லை
வாங்கியப் பின்
கழுத்தை திருகி
ஊற்றியப் பின்
உயரம் பார்த்து
சமத்துவம் காத்து
குடித்தப் பின்
குப்புற விழுந்து
முன்பின் தெரியா
முகம் பார்த்து
சிரித்து அழுது
தொடங்குகிறதுப் பேச்சு
ஓட்டு போட்டது முதல்
ஓசோன் ஓட்டை வரை
ஒன்று மட்டும்
புரிகிறது
நீரின்றி அமையாது
உலகு.
Subscribe to:
Posts (Atom)