Wednesday, December 23, 2009

வாழ்வும்
வனிதையும்


சாப்பிட்டுக் கொண்டிருக்கும்
போதே சோறள்ளி வைக்கும்
உணவகனின் மீதுள்ள
எரிச்சல்
பார்த்துக் கொண்டிருக்கும்
போதே போகலாம் என
கூறும் அவள் மீதும்
வருகிறதெனக்கு
முடிக்கும் வரை
பொருத்தா லென்ன
உயிர்வாழ முடியாது
என்னால்
அவளும் அன்னமும்
இல்லாமல்.

ஏதோ

ஊர்ல எல்லாம்
எப்பிடி
இந்தியா ஜெயிக்குமா
அந்த படம்
எப்ப ரிலீஸ்
இப்போதெல்லாம்
இருப்பைத் தெரிவிக்கவும்
நாகரிகத்துக்காகவேனும்
கேட்கப் படுகின்றன
நான்கு கேள்விகள்.
அன்னியனும்
இந்தியனும்


சுரண்டியப் பின்
சுதந்திரம் கொடுத்தான்
ஆங்கிலேயன்
சுதந்திரம் பெற்று
சுரண்டிக் கொண்டிருக்கிறான்
அரசியல்வாதி
முன்னவனுக்கு
முன்னூறு ஆண்டுகள்
ஆயின
பின்னவனுக்கு
ஐந்தாண்டே
அதிகம் தான்.
இருப்பு

அடர்ந்த மீசை
முரட்டுக் கோபம்
மிரட்டும் கண்கள்
சூரியனைக் கீறும்
வாள் என
ஆங்காங்கே ஊர்காக்க
ஐயனார் சிலைகள்
இருப்பினும் வந்து
தான் போகிறான்
அரசியல்வாதி
ஓட்டு கேட்டு.