Sunday, December 27, 2009

தெறிப்புகள்

ஏகமாய்ப் புசித்து
ஈசிச்சேரில் சாய்ந்து
பில்டர் காப்பி குடித்து
ஹிண்டு படிக்கும்
பாப்பானுக்கு தெரியாது
என் வீட்டுச்
சோறில்லா செய்தி.
--
நாய் வேஷம்
போட்டும் குரைக்க
முடியவில்லை
பசி.
--
பசியறுக்க
அரிசி இல்லையென்றாலும்
ஆஸ்திரேலியா ஜெயிக்க
கூடாது
இந்தியன்.
--
சமபந்தி விருந்து
செட்டி முதலி
பாப்பான் பறையன்
யாவரும்
ஒரே பந்தியில்
செய்திக்காக ஒரு
நாள் மட்டும்.
--

நிலவரம்

மூனு வருசமா
ஒரே பேண்ட்
இப்போதெல்லாம் நானே
முடித்திருத்திக்கிறேன்

ஆகாரமில்லாதவனுக்கு
அண்ணாக்கயிறு இல்லன்னா
என்னக் கொற
மார்கழி முடிஞ்சா
முப்பத்தி ரெண்டு

போட்ட வேலைக்கு
பதில் வர்லனா
பாலிடால் தான்

செழித்துப் போயிருக்கிறது
என் வருமை.