அகத்திணை
ஐந்தல்ல
ரத்தமும் ரத்தம் சார்ந்த பகுதியும்
பிணமும் பிணம் சார்ந்த பகுதியும்
வன்மமும் வன்மம் சார்ந்த பகுதியும்
சூன்யமும் சூன்யம் சார்ந்த பகுதியும்
பஞ்சமும் பஞ்சம் சார்ந்த பகுதியும்
பிணக்கும் பிணக்கு சார்ந்த பகுதியும்
அகதியும் அகதி சார்ந்த பகுதியும்
ஈழ நிலம்
என்றறிக.
No comments:
Post a Comment