Saturday, December 26, 2009

நிதர்சனம்

ஆளைப் போலவே
நாளுக்கொரு சேலை
கூந்தலில் குண்டுமல்லித்
தோட்டம்
ஊரை இழுக்க
உதட்டுச் சாயம்
அவசியமில்லாத இடத்திலும்
பத்துப்பல் புன்னகை
வேலைப் பளுவால்
விரைவாய்த் தொலைத்த
வயது.

பத்து நிமிடத்திற்குள்
செய்துவிட முடியும்
பணம் வேசியால்.

மேஸ்திரியின் மோகம்
எதிர்த்து செங்கற்கள்
அஞ்சுக்குப் பதிலாய்
எட்டென சுமந்து
பசியைப் பொறுத்து
பக்குவமாய் சேர்த்து
வாங்கிய கம்மல்
பிள்ளையின் பருவத்
தேர்வுக் கட்டணத்திற்கு
அவிழ்க்கப்படும்.

பத்தினியாய் வாழ்ந்து
பார் பத்துநாள்
தள்ள முடியாது.

இது கேள்
இந்தியா
வேசியாய்
அரிதாரம் பூசியதே
பதினோராம் நாள்
தானே.

No comments:

Post a Comment